த.தே.கூட்டமைப்பின் விசேட கூட்டம், யாழில் இடம்பெற்று வருகின்றது!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டம், யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்று வருகின்றது.

கடந்த 17 ஆம் திகதி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தொடர்ச்சியாகவே, இன்றைய கூட்டம் நடத்தப்படுகின்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற, பங்காளி கட்சிகளுக்கான ஆசன பங்கீடுகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக, கூட்டம் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்தக் கூட்டத்தில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட சில முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!