அம்பாறை கல்முனையில், தீ அனர்த்த விழிப்புணர்வு ஒத்திகை!!

அம்பாறை கல்முனையில் தீ அனர்த்த நிலையின் போது கையாள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை மேற்கொள்ளும் முகமாக கல்முனை பொதுச்சந்தை முன்பாக இன்று தீ அனர்த்த விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்வு நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை பொலிஸ் நிலையம், அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஆகியன இணைந்து இவ் விழிப்புணர்பு ஒத்திகையை மேற்கொண்டது.

இதன் போது கல்முனை பொதுச்சந்தையில் மாதிரி வர்த்தக நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது போல் ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. ஒத்திகையில் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயைக்கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

போக்குவரத்து பொலிஸார் வீதியை சீர் செய்து காயப்பட்டவர்களை அப்புறப்படுத்த உதவினர்;.

இந்நிகழ்வின் போது கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எல்.நஸீர், கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பிரியந்த உட்பட அரச அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!