பிரித்தானிய உயர்ஸ்தானிகர் புதிய அரசின் செயற்பாடுகளுக்கு பாராட்டு!!

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலா டி சில்வாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

சந்திப்பின் போது, புதிய அரசினால் சட்டத்துறையில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மட்டுமல்லாது, சிறைச்சாலை பிரிவில் மேற்கொள்ளவுள்ள மறுசீரமைப்புகள் குறித்தும் அமைச்சரினால், உயர் ஸ்தானிகருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த விடயங்கள் தொடர்பில், விசேட தெளிவூட்டல்களை வழங்குவதற்கும், பிரித்தானிய அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்த உயர்ஸ்தானிகர், தற்போது இடம்பெற்று வரும் மறுசீரமைப்பு பணிகள் குறித்து தமது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசின் கீழ், நாட்டின் அனைத்து சமூகங்களுக்கும் நீதியை சமமான வகையில் வழங்குவதே, அரசாங்கத்தின் கொள்கையும் திட்டமும் எனவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும், ஒரே விதமான சேவையை வழங்க அரசு செயற்படுவதாகவும், அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன் போது, சிறைச்சாலை தொடர்பான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும், சட்டங்களை உருவாக்குவதற்கும் இலங்கைக்கு உதவத் தயார் என, உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!