ராஜிதவுக்கு 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்!!

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவை, எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள, நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாத்னவை கண்காணிப்பதற்காக, கொழும்பு மேலதிக நீதிவான் ஷலானி பெரேரா அங்கு சென்றார்.

ராஜித சேனரத்னவுக்கு பிணை வழங்கப்படும் பட்சத்தில், விசாரணைக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடுமாறும், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக நீதிவானுக்கு சுட்டிக்காட்டினர்.

இதன் போது, மேற்படி விடயங்களை கருத்திற் கொண்டு, ராஜித சேனாரத்னவை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, நேற்றிரவு நரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவில் அனுதிக்கப்பட்ட ராஜித சேனாரத்ன, இன்று பிற்பகல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்த நிலையில், அதன் போது ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இருவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், இன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!