சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக ஆஜரானார் சுமந்திரன்!!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கைது செய்து, நீதிமன்றில் நிறுத்துங்கள் எனவும், முடியாவிட்டால் அவர்களுக்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக உள்ளது எனவும், ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் கூறியிருப்பதாக, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பகுதியில், சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக, ஊர்காவற்றுறை நீதிமன்றில், பொது மக்கள் சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், பொது மக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தர ணி எம்.ஏ.சுமந்திரன் இன்று ஆஜரானார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர்…

மண்கும்பான் பகுதியில் மணல் கொள்ளை இடம்பெற்றுவந்த நிலையில் பொதுமக்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் இணைந்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். எனினும் ஒரு சிலர் மட்டுமே கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில்,

அண்ணளவாக 10 போர் வரையில் கைது செய்யப்படாமல் உள்ளனர். அவர்களை கைது செய்ய முடியவில்லை. என பொலிசார் மன்றில் கூறியிருக்கின்றனர், ஆனால் அந்த நபர்கள் ஊருக்குள் வந்து செல்வதாகவும், பொலிசார் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் மக்கள் கூறுகின்றனார்.

அதனை முறைப்பாட்டாளர் பிரசன்னத்தில் நீதிமன்றில் வாய்மூல முறைப்பாடாக கூறியுள்ளோம். அதனை கருத்தில் எடுத்துள்ள நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டிருப்பதுடன், கைது செய்ய முடியாவிட்டால் பகிரங்க பிடியாணை பிறப்பிப்பதற்கு நீதிமன்றம் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கின்றார்.

எனவே இத்தோடு மணல் அகழ்வு நிறுத்தப்படும். என நாங்கள் நம்புகிறோம். மறுபக்கம் கனியவள திணைக்களம் மணல் அகழ்வதற்கான சகல அனுமதிகளையும் இரத்து செய்துள்ளது. எனவே மணலை அகழவும் முடியாது கொண்டு செல்லவும் முடியாது. மணல் மிக முக்கியமான இயற்கை வளம். அதனை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!