புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
.ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துதெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சரி மக்களின் கண்கள் திறக்கும் என நம்புகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் இடம்பெற்றுவரும் சில விடயங்கள் நாட்டைப் பாதிக்கும் விதமாக அமைந்துள்ளன.அரசாங்கத்தின் செயற்பாடுகள், நாட்டின் நிலை என்பன குறித்து சாதாரண மக்களுக்குப் புரியும் வகையில் கருத்து வெளியிட்டு வந்த இருவரில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்
உண்மையில் கடந்த 2004 ஆம் ஆண்டில் சந்திரிகா குமாரதுங்க லக்ஷ்மன் கதிர்காமரையே பிரதமராக நியமிப்பதற்குத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அவர் வேறொரு இனத்தவர் என்பதால் சம்பிக்க ரணவக்க தலைமையிலானோரே மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக்குவதற்கு முன்நின்று செயற்பட்டனர் என குறிப்பிட்டார்
அதேபோன்று ‘மஹிந்த சிந்தனை’ என்ற புத்தகமும் சம்பிக்க ரணவக்கவினாலேயே எழுதப்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.