ஆலையடிவேம்பு ஆலய நிருவாகத்தினருடன் கோடீஸ்வரன் எம்.பி கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட இந்து ஆலயங்களின் நிருவாகத்தினருடனான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் 21இற்கும் மேற்பட்ட ஆலயங்களின் நிருவாகத்தினர் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமன்றத்தினர் என பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது ஆலயங்களின் தற்கால நிலைமைகள் தொடர்பிலும் எதிர்காலத்தில் ஆலயங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் ஆலயங்கள் யாவும் ஒரு குடையின் கீழ் செயற்படுவதன் முக்கியத்தும் பற்றியும் இந்து மதத்தை பாதுகாப்பது தொடர்பிலும் கடந்த காலத்தில் ஆலயங்களின் வளர்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கிய பங்களிப்பு தொடர்பிலும் ஆலய நிருவாகத்தினரால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

வடகிழக்கு தமிழர்களை ஐக்கிய தேசியக் கட்சி கடந்த காலத்தில் ஏமாற்றியது என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் இதன்போது தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!