கிடாச்சூரியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில், பெண்ணிடம் இருந்து பணப்பை திருடப்பட்டுள்ளதாக, பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
இன்று மதியம், கிடாச்சூரியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற பேருந்தில், பெண்ணின் பையிலிருந்த மணிப்பேர்சை எடுத்து, அதிலிருந்த பணம் மற்றும் இலத்திரனியல் அட்டைகளையும் திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், பேருந்தில் இருந்து இறங்கிய பெண், தனது பை திறக்கப்பட்டுள்ளதை பார்த்த போது, பணப்பை திருடப்படடது தெரியவந்தது.
அதையடுத்து, வவுனியா பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார், பெண்ணுக்கு அருகே, பேருந்தில் நின்று வந்த, தாய், மகள் இருவரையும், சந்தேகத்தில் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.