மதவாத நடவடிக்கைளுக்கு எதிராக, விசாரணை நடத்தப்படும் : பிரதமர்

பாடசாலை மாணவர்கள் மத்தியில், மதவாதம் பரப்பப்படுவது தொடர்பில், விரிவான விசாரணையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளதாக, பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இன்று, வவுனியா ஈரட்டை பெரியகுளம் பரக்கும் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்வாறு குறிப்பிட்டார்.

பல்வேறு உதவிகள் ஊடாக கிடைக்கும் பணத்தினைக் கொண்டு இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள், எமது கல்வி முறைமைக்குள் ஊடுருவுவதனை நாம் காண முடிகின்றது.

அதனை நாம் கண்ணூடாக கண்டிருக்கின்றோம்.

விசேடமாக தேரர்கள் சிலர் மாணவர்களுக்கான புத்தகங்களை வழங்கும்போது, ஒரு பக்கச்சார்பான பிரசார பரப்புரைகளை உள்ளீடு செய்திருக்கின்றார்கள்.

அதுபோன்று அரசாங்கம் அச்சிட்டு வெளியிட்டுள்ள சில புத்தகங்களில், வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒரு மாகாணமாக இணைத்து காட்டப்பட்டிருக்கின்றது.

ஒரு சில புத்தகங்களில் சிங்கள புது வருடம் இல்லாமல் ஒழிக்கப்பட்டிருக்கின்றது.

இதுபோன்ற தவறுகளால் நாட்டில் எவ்வாறான விடயங்கள் தோன்றும்?
குழந்தைகளின் மத்தியில் என்ன மாதிரியான சிந்தனை உருவாகும்?
இதனை நாம் அனைவரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த நாட்டை பிரிப்பதற்கு, சிங்கள பௌத்த மக்களை சீரழிப்பதற்கு, சிங்கள, தமிழ், கிறிஸ்தவ, இந்து மக்கள் இடையே இருக்கின்ற உறவினை சீர் குலைப்பதற்கும், பாரிய வேலைத்திட்டம் ஒன்று நாட்டில் முன்னெடுக்கப்பட்டு கொண்டு இருக்கின்றது.

தமது இந்த நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக தமது செயற்பாடுகளை பாலர் வகுப்பு குழந்தைகளிடத்திலிருந்து ஆரம்பிக்கின்றார்கள்.

இதன் காரணமாக சில ஆண்டுகள் கடந்ததன் பிற்பாடு, யாருக்கும் தெரியாமல் சிங்கள மக்களின் மனநிலையில் மாற்றம் வருகின்றது.

பாடசாலைகளில் பயன்படுத்தப்படும் புத்தகங்கள் ஊடாக, மாணவர்களின் மனங்களில் விதைக்கப்படும் மதவாதம் தொடர்பில், விரிவான விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு நாம் எதிர்பார்த்து இருக்கின்றோம்.  என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!