மாணவர்களுக்கு சீருடைத் துணி மற்றும் சப்பாத்து வவுச்சர்கள் வழங்கப்படும் : அமைச்சர்

 

2020 ஆம் ஆண்டு முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும்போது அனைத்து மாணவர்களுக்கும் சீருடைத் துணி மற்றும் சப்பாத்து என்பவற்றுக்கான வவுச்சர்கள் வழங்கப்படும்  என்று கல்வி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனவரி 3 ஆம் திகதிக்கு முன்னர் சகல மாணவர்களுக்கும் வவுச்சர்களை வழங்கி முடிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் இலக்காகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!