ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் தற்போது ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகளை நிறுத்தும் வரை அமைச்சரவை கூட்டத்தை நடாத்த மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வெளிநாடு சென்றிருந்ததால் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை.
எனினும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் இன்றையதினம் இடம்பெறவுள்ள நிலையில், அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.