யாழ்ப்பாணம் மாநகர சபைக்குட்பட்ட மற்றும் யாழ். நகரத்தை அண்டிய பகுதியில், அனுமதி பெறப்படாது சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும், பௌத்த மத அடையாளங்களை காட்சிப்படுத்தும் வேலைத் திட்டங்களை தடை செய்ய, மாநகர சபை தீர்மானித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் சிறப்பு அமர்வு, பிரதி முதல்வர் மு.ஈசன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன், அனுமதி பெறப்படாமல் அமைக்கப்பட்டு வரும், பௌத்த மத அடையாளங்களை தடை செய்து அகற்றுவதற்கு, உரிய திணைக்களங்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்புதல் என்ற பிரேரணையும், யாழ்ப்பாண மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதி முதல்வர் ஈசன் தலைமையில், யாழ்ப்பாணத்தில் பௌத்த சின்னங்கள் அனுமதி பெறப்படாது அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பிரேரணை ஒன்றை எடுப்பதற்காக, இன்று விசேட கூட்டம் நடாத்தப்பட்டதுடன், இதன் போது தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.