மட்டக்களப்பு கல்லடி கடல் மீன் விளையாட்டுக் கழக ஆதரவுடன் சுனாமி ஞாபகார்த்த 15 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, இன்று கல்லடி கடல் மீன் சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.
பரிசளிப்பு நிகழ்விற்கான அனுசரணையினை வசீகரன், கோட்டைமுனை விளையாட்டு கிராமம் மற்றும் ட்ரீம் ஸ்பேஸ் அக்கடமி ஆகியோர் வழங்கியிருந்தனர்.
பிரதம அதிதியாக மட்டு மாநகர முதல்வர் தி.சரவணபவன், கௌரவ அதிதிகளாக பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பி.வாசுதேவன், கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் ஆ.யோகராஜா, இராசமாணிக்கம் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன், ஒய்வு பெற்ற அதிபர்களான ஹரிதாஸ், திலகவதி ஹரிதாஸ், மாநகர சபை உறுப்பினர்கள், தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணித் தலைவர் தீபாகரன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் சுனாமி அனர்த்தத்தில் உயிர் இழந்தவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. பல மாணவர்களும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.