மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேசத்திலுள்ள மாற்றுத்திறனாளிகள் அமைப்பினால் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நிகழ்வு இன்று நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் த.வரதராஜன் தலைமையில் களுவாஞ்சிக்குடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் கலந்துகொண்டார்.
சிறப்பு அதிதியாக மண்முனை தென் எருவில்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோகநாதன், உதவிப்பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரணிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்றில் உள்ள 599 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
இங்கு 699 இற்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் இருக்கின்றனர்.
இவர்களின் ஆற்றல்களையும், வாழ்வாதாரத்தையும் மீளக்கட்டியெழுப்புவதில் பிரதேசசெயலகம் முன்நின்று செயற்பட்டு வருவதாக பிரதேசசெயலாளர் சிவப்பிரியா வில்வரத்தினம் தெரிவித்தார்.
இங்கு மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்வுகளும் பரிசளிப்பு நிகழ்வும் நடைபெற்றது.