மட்டக்களப்பு காத்தான்குடியில் வெள்ள நீர் தேங்கி நின்ற பாடசாலைகளை சிரமதானம் செய்யும் வேலைத்திட்டத்தினை காத்தான்குடி சமூக குழுமம் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடி பிர்தௌஸ் வித்தியாலயத்தினை துப்பரவு செய்யும் பணி இன்று நடைபெற்றது.
காத்தான்குடி சமூக குழுமத்தின் தலைவர் ஏ.எம்.பர்சாத் தலைமையில் நடைபெற்ற இந்த சிரமதானத்தில் உறுப்பினர்கள் பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பாடசாலை வளாகத்தில் படர்ந்திருந்த புற்கள் மற்றும் குப்பைகளும் இதன் போது துப்பரவு செய்யப்பட்டு அகற்றப்பட்டன.