தேயிலை உற்பத்தி தொழிற்துறையினரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (26) இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொணடு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு நியாயமான சமூக அந்தஸ்தை உருவாக்குவதும் அதேபோல் சிறிய தேயிலை தொழிற்துறையினருக்கு சிறந்த சமூக அந்தஸ்தை உருவாக்குவதும் அவசியம் என அமைச்சர் தெரிவித்தார்.
அதற்காக எமது அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.