குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்கப்பட்ட முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியாசலையில், இருதய சத்திர சிகிச்சை பிரிவில் நேற்றிரவு அனுதிக்கப்பட்ட அவரிடம், குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றையதினம் வாக்குமூலம் ஒன்றினையும் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, வெள்ளை வான் விவகாரம் தொடர்பில் ஊடக சந்திப்பை நடத்தியிருந்த நிலையில், அதன் போது ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட இருவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவும், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். (சி)