பௌத்த மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது

அகில இலங்கை பௌத்த மத பாடசாலை மாணவர்களுக்கு இடையில் இடம்பெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, வவுனியாவில் இன்று நடைபெற்றது.

புத்தசாசன கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சு, பௌத்த மத அலுவல்கள் திணைக்களம், வவுனியா மாவட்ட செயகத்தின் ஏற்பாட்டில், வவுனியா பரக்கும் மகா வித்தியாலயத்தில் நிகழ்வு நடத்தப்பட்டது.

பிரதம விருந்தினராக, பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துகொண்டார்.

இதன் போது, வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை பூராகவும் உள்ள 600க்கு மேற்பட்ட பௌத்த மாணவர்களிற்கு பரிசில்களும் பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, எஸ்.எம்.சந்திரசேன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களன கே.கே.மஸ்தான், வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், மாவட்டங்களை சேர்ந்த அரசாங்க அதிபர்கள், கல்வித்திணைக்கள அதிகாரிகள், மதகுருமார்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!