மட்டக்களப்பில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது

சுனாமி கடற்கோள் அனர்த்த நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் பாலையடித்தோன் கடலூர் கடற்கரையில் நினைவு கூறப்பட்டது.

இந்நிகழ்வை லண்டன் அனைத்துலக மனிதநேய அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது உயிர் நீத்த உறவுகளுக்கு 2 நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் நினைவுச் சுடர் ஏற்றப்பட்டு பிரார்த்தனையும் இடம்பெற்றது.

சூரிய கிரகணம் நாட்டில் இடம்பெற்றதை தொடர்ந்து வழமைக்கு மாறாக இம்முறை நேற்று மாலை நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் பிரதேச செயளாளர் எஸ்.ராஜ்பாவு, மதகுருமார் மற்றும். லண்டன் அனைத்துலக மனிதநேய அமைப்பு தொண்டர்களும்; கலந்து கொண்டனர்.

நிகழ்வின் இறுதியில் குறித்த அமைப்பினால் சுனாமி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!