அம்பாறையில் மக்களிடம் கையளிக்கப்படாத வீடுகளை பார்வையிட்ட எம்.பி

அம்பாறை மருதமுனையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படாத வீடுகளை அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீயாணி விஜயவிக்கிரம நேற்று நேரில் சென்று பார்வையிட்டார்.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தில் மருதமுனை கிராமத்தில் 65 மீற்றருக்குள் பாதிக்கப்பட்ட மக்களுக்கென மேட்டுவட்டைப் பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டன.

அவற்றில் 98 வீடுகள் இன்று வரை பகிர்தளிக்கப்படாது காணப்படுகின்றது.

குறித்த வீடுகளை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் பிரதேசத்திற்கான அமைப்பாளர் பி.சார்மில் ஜாகான் விடுத்த வேண்டுகோளின் பேரிலேயே நேரில் சென்று பார்வையிட்டார்.

குறித்த வீடுகளை விரைவில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயாணி விஜயவிக்கிரம தெரிவித்தார்;.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!