மட்டக்களப்பில் சுனாமி நினைவேந்தல் இடம்பெற்றது

சுனாமி அனர்த்தத்தில் உயிர்நீர்த்தவர்களுக்கான ஆத்மசாந்தி நிகழ்வுகள் மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்திற்கு முன்பாக நேற்று மாலை நடைபெற்றது.

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலய நிர்வாகம், விஸ்வப்பிரம்மகுல வாலிபர் சங்கம், கோல்டன் விளையாட்டுக்கழகம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் மற்றும் வடபத்திரகாளியம்மன் ஆலயங்களின் தலைவர் எம்.கிருபைராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது சுனாமி அனர்த்தத்தின்போது மகனை இழந்த தாயாரால் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உயிர்நீர்த்தவர்களின் ஆத்மசாந்திக்கான பூஜைகள் இடம்பெற்றன.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!