அம்பாறையில் சிரமதானப் பணிகள் முன்னெடுப்பு

அம்பாறை திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகளை நேற்று முன்னெடுத்தனர்.

டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிகள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரி வைத்தியர் பி.மோகனகாந்தனின் தலைமையில் நடைபெற்றன.

திருக்கோவில் பிரதேசத்தில் கடந்த ஒருமாத காலமாக பெய்த கனமழை காரணமாக வைத்தியசாலையின் சுற்றுச் சூழலில் வெள்ள நீர் நிரம்பி காணப்பட்டதன் காரணமாக சூழலை முழுமையாக சுத்தப்படுத்த முடியாத நிலைமை காணப்பட்டது.

தற்போது வெள்ளம் வடிந்துள்ள நிலையில் டெங்கு நுளம்பகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் திருக்கோவில் பிரதேச சபையின் இயந்திர உதவிகளுடன் வைத்தியசாலை உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் பாரிய சிரமதானப் பணியை முன்னெடுத்தனர்.

சிரமதான பணியில் திருக்கோவில் பிரதேசசபையின் தவிசாளர் இ.வி.கமலராஜன், வைத்தியர்கள், சிரேஸ்ட தாதியர்கள், உத்தியோகத்தர்கள், சிற்றூழியர்கள் எனப் பலர் கலந்து கொண்டு டெங்கு ஒழிப்பு சிரமதான பணிகளை முன்னெடுத்தனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!