கண்டி நுவரெலியா பிரதான வீதியில் தவலந்தன்ன பிரதேசத்தில் கொத்மலை பிரதேச சபையின் அனுசரைனையில் புதிதாக அமைக்கப்பட்ட மலசலகூட தொகுதி பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகின்றது.
மலசலகூடத்தின் சில பாகங்கள் தற்போது உடைந்த நிலையில் காணப்படுவதுடன் மக்களின் பணத்தில் அமைக்கப்பட்டு கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த வீதியினூடாக நாளாந்தம் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் நுவரெலியா பிரதேசத்திற்கு செல்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிலையில் குறித்த மலசலகூடங்கள் அமைக்கப்பட்டமை வரவேற்கத்தக்க ஒன்றாகும் என்றும், எனினும் மக்கள் பயன்படுத்துவதற்காக இதனை உடனடியாக திறந்துவைக்குமாறும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
எனினும், குறித்த மலசல கூடத்திற்கு தேவையான நீரை வழங்குவதில் பிரச்சினை காணப்படுவதாகவும், தற்போது அதனை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கொத்மலை பிரதேச சபைத் தலைவர் சுசந்த ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.