வெள்ளை வேன் சம்பவ நபர்கள் மீண்டும் விலளக்கமறியல்

வெள்ளை வேன் சம்பவ ஊடக சந்திப்பு தொடர்பில் கைது செய்யப்பட நபர்கள் எதிர்வரும் 6ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.

சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர் படுத்தப்பட்டனர்.

மூன்றாவது சந்தேக நபர் தொடர்பில் நீதிமன்றில் இதன்போது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையிலே குறித்த இரு சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வௌ்ளை வேன் ஓட்டுனர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் டிசம்பர் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!