சபரிமலையில் மண்டல பூஜை நடைபெற்றது

இந்தியாவின் சபரிமலை ஐயப்பன் ஆலயத்தில் முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெற்றது.

மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 16ஆம் திகதி நடை திறக்கப்பட்டதை அடுத்து, நிர்மால்ய தரிசனம், அபிஸேகம், உஸா பூஜை, களபாபிஸேகம், தீபாராதனை நடைபெற்று வந்தன.

தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசனம் செய்துவந்த நிலையில், முக்கிய நிகழ்ச்சியான மண்டல பூஜை இன்று நடைபெற்றது.

மண்டல பூஜையையொட்டி இன்று அதிகாலை 3 மணிக்கு ஆலய நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடைபெற்றன.

இதேவேளை, சூரிய கிரகணத்தையொட்டி நேற்று காலை 7.30 மணியில் இருந்து 11.30 மணி வரை 4 மணி நேரம் சபரிமலை ஆலய நடை அடைக்கப்பட்டு பின்னர் நடை திறக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!