கட்டுப்பாட்டு விலை மீறி விற்பனை வியாபாரிகளுக்கு சட்ட நடவடிக்கை

மாத்தறை மாவட்டத்தில் அரிசியை அதி கூடிய கட்டுப்பாட்டு விலை மீறி விற்பனை செய்த 5 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2 வகையான அரிசிகள் ஆக கூடிய சில்லறை விலை 98 ரூபாவாக நிர்ணயித்து நுகர்வோர் அலுவல்கள் தொடர்பான அதிகார சபை வர்த்தகமானியில் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வர்த்தமானி அறிவிப்பை கவனத்தில் கொள்ளாது அரிசியை கூடுதலான விலைக்கு விற்பனை செய்த கிரிந்த பிரதேசத்தில் சேர்ந்த 2 வியாபாரிகளுக்கும் , ஹக்மனவை சேர்ந்த ஒருவருக்கும், காலாவதியான பொருட்களை விற்பனை செய்த மற்றும் விலைப்பட்டியலை காட்சி படுத்தாது அரிசியை விற்பனை செய்த 2வியாபாரிகளுக்கும் எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!