சீனாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் சிசுவான் மாகாணத்தில் நேற்று இரவு மற்றும் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
சிசுவான் மாகாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6 புள்ளியாக பதிவாகியது.
இதேவேளை இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும் பதிவாகியது.
இந்த இரு நிலநடுக்கம் காராணமாக அங்குள்ள மக்கள் அச்சமடைந்ததோடு, வீதிகளில் தஞ்சமடைந்திருந்தனர்.
இதேவேளை, 11 பேர் உயிரிழந்த நிலையில், 122பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
சிசுவான் மாகாணத்திற்கு அருகேயுள்ள மாகாணமான யுனான் மாகாணத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.