பதவி விலகிய முஸ்லிம் எம்.பி.க்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி அடுத்தகட்டமாக எவ்வாறான நகர்வை முன்னெடுப்பது என்பது தொடர்பில் ஆராயவுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட இருந்த ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் நாட்டின் இன ஒற்றுமையை பாதுகாக்கும் வகையிலும் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளில் இருந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்திருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அரசாங்க தரப்பில் இருந்தும் மகாநாயக்க தேரர்களும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அமைச்சுப்பதவிகளை மீண்டும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும் என அழுத்தம் தெரிவிக்கப்படும் நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் கூடி ஆராய இருக்கின்றனர்.
அத்துடன் கூட்டத்தில் சாத்தியமான இணக்கப்பாடு ஏற்பட்டால் அடுத்தகட்டமாக பிரதமரையும் சந்தித்து கலந்துரையாடவும் எதிர்பார்க்கப்படுகின்றது.(சே)