ஹிஸ்புல்லாவின் கருத்துக்கு ஹக்கீம் பதிலளிக்க வேண்டும்

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவு குழுவில் குறிப்பிட்டபோது தெரிவு குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வியெழுப்பவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறிப்பிட்டது தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெளிவுப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

பாராளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது என்பதை தெளிவாக தெரிந்தக் கொள்ள முடிவதாகவும் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பவர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே கேள்விகள் எழுப்பப்படுவதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிடப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு முக்கியத்துவம் வழங்கி அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.(நி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!