ஜனாதிபதியின் சில முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி உணர்ச்சிகரமாக எடுக்கும் முடிவுகள் பாதகமான விளைவுகளையே தருவதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநரின் அண்மைய நடவடிக்கைகளை ஜனாதிபதி நன்றாக புரிந்து செயலாற்ற வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். (நி)