பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைக்கு கண்காணிப்புக் கமரா

நாட்டில் ஏற்பட்டுள்ள பயங்கரவாத சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் களுவாஞ்சிகுடி வட்டார உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜின் வேண்டுகோளுக்கிணங்க களுவாஞ்சிகுடி பொதுச்சந்தைத் தொகுதியில் பாதுகாப்புக் கண்காணிப்புக்கமாரக்கள் திங்கட்கிழமை  மாலை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் பொருத்தப்பட்டுள்ளன.

பட்டிருப்புத் தொகுதியின் மக்கள் அனைவரும் ஒரே இடத்தில் தமது பொருட்களை நுகரக்கூடிய இடமாக களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைத் தொகுதி காணப்படுகின்றது. தமிழ் மக்கள் மாத்திரம் செறிந்து வாழும் பட்டிருப்புத் தொகுதியிலுள்ள மக்கள் இந்த பொதச் சந்தையிலேயே பொருட்களை கொள்வனவு செய்வதற்கும், விற்பதற்கும் உரிய இடமாக இருந்து வருகின்றது.

எனிதும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலமை காரணத்தினால் இச்சந்தைத் தொகுதிக்கு வரும் மக்களின் பாதுகாப்பு நிலமை கருதி அப்பகுதியைய் சூழ 11 பாதுகாப்புக் கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இனிமேல் இப்பொதுச் சந்தைக்கு வரும் மக்கள் அச்சமின்றி தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வந்து செல்லாம் எனவும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் இதன்போது தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: Satheesh

error: Content is protected !!