குண்டுத்தாக்குதலுக்கு பின் அரசியல் தீவிரம்!

இலங்கையின் அரசியல் செயற்பாடுகள், ஏப்ரல் 21 தற்கொலை குண்டுத் தாக்குதலின் பின்னர் தீவிரம் அடைந்துள்ளது என, புதிய மார்க்ஸிஸ லெனினிஷ கட்சியின் செயலாளர் சி.க.செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்.

இலங்கையின் அரசியலானது நாளாந்தம் பரபரப்பானதும் அதிர்வுகளுடையதாகவும் மாறிக்கொண்டிருக்கிறது, இவை அனைத்தும் ஒக்ரோபர் மாதம் ஜனாதிபதி செயலகத்தால் முன்னெடுக்கப்பட்ட சதி தொடங்கி ஏப்ரல் 21வரை நடந்த குண்டு வெடிப்புடன் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

மாவை சேனாதிராஜா அடிக்கடி அறிக்கைகளை விடுவார் முன்னுக்கு சொன்னதை மறுத்து பேசுவார் அது அவருடைய இயல்பாக இருக்கிறது.

இவை அனைத்தும் தமிழ் மக்களை உசுப்பேற்றி வாக்கு வங்கியை நிரப்புவதற்கான செயற்பாடாகும் நிறைவேற்ற முடியாத கொள்கைகளை யதார்த்தத்தை புரிந்து கொள்ளாத கொள்கைகளை காலத்ததுக்கு காலம் வைத்து, இனஉணர்வுகளை தூண்டிவிட்டு வாக்கு சேகரிக்கும் செயற்பாடு முன்னெடுப்பவர்களே தமழரசுக் கட்சியினர்.

இவர்கள் எடுத்த தவறான கொள்கைகளின் வளர்ச்சிதான் 2009 முள்ளிவாய்க்காலில் மக்கள் கொல்லப்பட்டு, போராட்டம் முடிவுற மூல காரணமாக அமைந்தது.

இவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மை செய்வதாக கூறிக்கொண்டு தங்களுடைய நலன்களையும், மேட்டுக்குடி தமிழர்களின் நன்மைகளையும் மட்டுமே பார்க்கிறார்கள்.

இந்தியா சொல்வதை தான் கேட்போம் என்கிறார்கள்அந்த இந்தியா தான் தமிழ் மக்களின் இவ்வளவு அழிவுக்கும் மூல காரணமாக இருந்த வெளியுலக சக்திகளில் ஒன்றாகும்.

அடுத்த தேர்தல் வருகின்ற போது நீங்கள் என்ன முடிவு எடுப்பீர்கள்என்று கேட்டால் சேனாதிராஜா சொல்கிறார் இந்தியாவை கேட்டு தான் முடிவு சொல்வோம் என்று.

இவர்கள் செய்யும் இந்த வேலையை இவ்வளவு அழிவுகளையும் கண்ட தமிழ் மக்களை மீண்டும் கொண்டு போய் இந்தியாவிடம் ஒப்படைக்கின்ற தரகர் வேலையாகதான் பார்க்கிறோம்.

நாம் ஒருபோதும் இந்திய மக்களை எதிர்க்கவில்லை, இந்திய மக்களும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து போராராடுபவர்கள் தான்.

இந்திய தமிழ் மக்கள் எமக்காக குரல் கொடுப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியது ஆனால் ஆளும் தரப்பான டெல்லி கொள்கை வகுப்பாளர்கள் ஒருபோதும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வந்ததில்லை.

தமிழ் தலைமைகள் கூறுவார்கள்இந்தியா வருகிறது அவர்கள் எம் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று ஆனால் இன்று வரை எந்த தீர்வும் கிடைத்ததில்லை.

தமிழ் தலைமைகளுக்கு இந்தியாவிலே சொத்துக்கள் இருக்கின்றது வர்த்ததக நிலையங்கள் இருக்கின்றது அதை பாதுகாப்பதற்காக தான் இவர்கள் இந்திய கொள்கைகளுடன் இணங்கிப் போகிறார்கள்.

மத்திய அரசாங்கத்துடன் இவர்கள் இணங்கிப் போவதில்சுயநலமும் இருக்கிறது பிற்போக்குத்தனமான இணக்கப்பாடுகளும் இருக்கிறது.

தமிழர் பாரம்பரிய கோவில்களில் புத்த சிலைகளை வைத்து அவை விஸ்தரிக்கப்பட்டு பௌத்த கோவில்களாக மாற்றப்பட்டு வருகின்றன, பௌத்த விகாரைகளை விஸ்த்தரித்து அதற்குரிய விகாராதிபதிகள் நியமிக்கப்பட்டு
அந்த கோலிலை அண்டிய பகுதிகளில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை காலத்துக்கு காலம் முன்னெடுத்து வருகின்றார்கள்.

இதன் நோக்கம் தனியே ஒரு கோவில் இடத்தில் விகாரைகளை கட்டுவதல்ல பாரம்பரிய தமிழ் மக்களின் இடத்தில் சிங்கள குடியேற்றங்களை கொண்டுவருவதாகும்இவை ஒரு பேரினவாத ஒடுக்குமுறையாகும். என குறிப்பிட்டார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!