மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட பொசன் விழா இன்று மங்களாராம ரஜமகா விகாரையில் நடைபெற்றது.
உள்ளக உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சின் அனுசரணையின் கீழ் “ அனைத்து உயிர்களும் தண்டனைக்கு பயப்படுகின்றனர் “ எனும் தொனிப்பொருளில் 12 திகதி முதல் 18 ஆம் திகதி வரை பொசன் வாரமாக பிரகடனப்படுத்தப் பட்டு விசேட பொசன் வாரமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதற்கு அமைய மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பொசன் வாரத்தை சிறப்பிக்கும் விசேட சமய வழிபாடும், மாவட்ட பொசன் விழா அன்னதான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் எம் .உதயகுமார் தலைமையில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம ரஜமகா விகாரையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற விசேட பொசன் விழா சமய வழிபாட்டில், மட்டக்களப்பு மங்களாராம விகாராதிபதி சீலரத்ன தேரர் கலந்து கொண்டு சமய வழிபாட்டினை நடாத்தியதோடு, பொசன் விழா அன்னதான நிகழ்வினையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் , உதவி மாவட்ட செயலாளர் எ .நவேஸ் வரன் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.(சி)
B