முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்வில நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்தவாரம் பொலிஸ் தலமையகத்தில் அமைக்கப்பட்டிருந்த விசேட முறைப்பாட்டுப் பிரிவில் றிசாட் பதியுதீனுக்கு எதிராக 16 குற்றச் சாட்டுக்களையும் 80 சாட்சிகள் அடங்கிய ஆவணங்களையும் பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்வில வழங்கியிருந்தார். அந்த முறைப்பாடு தொடர்பில் கம்மன்வில நிதி மோசடி விசாணைப்பிரிவுக்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது
.
றிசாட் பதியுதீன் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டபோது நாம் 80 சாட்சிகள் சகிதம் 16 குற்றங்கள் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்திருந்தோம். அதில் றிசாட் பதியுதீனுடய சொந்தங்கள் கையகப்படுத்திய மூவாயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் காணியின் 68 உறுதிக் கொப்பிகளை நாம் பொலிஸாரிடம் வழங்கியுள்ளோம். இந்த ஆவணங்களை சாட்சிகளை சேகரிப்பதற்கு நாம் ஒரு கிழமைகள் காத்திருந்து பொலிஸில் முறைப்பாடு செய்தால் அவர்கள் மூன்று மணி நேரம் எமது முறைப்பாட்டினை பதிவு செய்து விட்டு போகச் சொல்லி மீண்டும் நிதி மோசடிப் பிரிவிற்கு அழைத்து அங்கும் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றார்கள்.
நாம் ஒருவருக்கு எதிரான முறைப்பாட்டை செய்யப் போய் மூன்று முறை அலக்களிக்கப்படுகின்றோம். எனவே எமக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இந்த அரசாங்கம் தண்டணை வழங்குவது குற்றம் இழைத்தவருக்கா? அல்லது குற்றத்தை காட்டிக் கொடுத்தவருக்கா? ஏன் எனில் நாம் இவ்வாறு துன்பப்படுகின்றோம். குற்ற வாளியான றிசாட் பதியுதீனின் உரோம் ஒன்றுக்குக் கூட பிரச்சினை வரவில்லை என்று தெரிவித்தார்.