இலங்கை இராணுவத்தில் இன, மத வேறுபாடுகள் இல்லை என இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹரகம அபேக்ஸா வைத்திசாலைக்கு இன்று காலை இராணுவத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் இரண்டு இஸ்கேனர்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கை இராணுவத்தில் இப்போது முஸ்லீம் வீரர்கள் 700 பேர் கடமையில் இருக்கின்றார்கள் அதேபோல கிறிஸ்தவர்கள் 1600 இருக்கின்றார்கள் இந்து மதத்தை பின்பற்றும் இராணுவத்தினர் 200 பேர் இருக்கின்றார்கள் ஏனையவர்கள் புத்த மதத்தை பின்பற்றுபவார்கள் அதனால் தான் நான் கூறுகின்றேன் இங்கு இன, மத வேறுபாடுகள் இல்லையென்று என தெரிவித்தார்
இலங்கை இராணுவம் தங்களுடைய கடமைகளுக்கு அப்பால் சென்று மக்களுக்காக சேவைகளை செய்துகொண்டிருக்கின்றது.
மே மாதம் 10ஆம் திகதி குளியாபிட்டியவில் இடம்பெற்ற சம்பவம் முழுமையான அரசியல் நடவடிக்கை அது பாதுகாப்புடன் தொடர்புடையது என்று கூற முடியாது என்றாலும் நாம் அவை அனைத்தையும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தோம் என்று தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்து தெரிவித்த அவர் இலங்கை ஒரு விவசாய நாடு வகையில் எங்களுக்கு பல குளங்கள் உள்ளது அவற்றை புனர் நிர்மாணம் செயும் பணிகளை இராணுவம் ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்தார். (சே)