மீண்டும் சாகும் வரை உண்ணாவிரதப்போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி மதத்தலைவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை ஸ்ரீ சுபத்திராரம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ண தேரர், கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ ச.கு. சச்சிதானந்தக்குருக்கள், பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய பூசகரும், கல்முனை மாநகர சபை உறுப்பினர் அ.விஜயரெத்தினம், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ஆகிய நால்வருமே சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.(சே )

 

Recommended For You

About the Author: Thujiyanthan

error: Content is protected !!