சோமாலியாவில் தொடர் குண்டுவெடிப்பு பலர் மரணம்

சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்,மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.

சோமாலியாவின் தலைநகர் மொகாதீசுவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகே உள்ள பொலிஸ் சோதனை சாவடியில் பொலிஸார் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்கு அல்-கொய்தாவின் ஆதரவுபெற்ற அல்-ஷபாப் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக அல் – ஷபாப் பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்று சில மணி நேரத்தில் மொகாதீசுவில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு செல்லும் வீதியில் மற்றொரு கார் வெடிகுண்டு வெடித்தது.

 

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த இரட்டை கார் குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு அல்-ஷபாப் பயங்கரவாதிகள் பொறுப்பு ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.  (சே)

 

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!