ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு ! இருவர் பலி !

ஆப்கானிஸ்தானில் நோன்பு பெருநாள் தொழுகையின் போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் பலியானதுடன்  14 பேர் படுகாயமடைந்தனர்.

ஆப்கானிஸ்தான் நஹ்ரெயின் மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்று கொண்டிருந்தது.

அப்போது அங்கு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது. இதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் 14 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து பாக்லான் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Recommended For You

error: Content is protected !!