கப்பலின் பாகங்களை கழற்றிய வெளிநாட்டு நபர்கள் மூவர் கைது  

மட்டக்களப்பு கல்லடி ஆழ்கடல் பகுதி கடலில் 2 ம் உலக யுத்த காலப்பகுதியில் மூழ்கடிக்கப்பட்ட கப்பலின் பாகங்களை சட்டவிரோதமான முறையில் கழற்றிய 3 வெளிநாட்டு பிரஜைகளை வெள்ளிக்கிழமை இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள வெளிநாட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட கப்பலின் பாகங்களை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட பிக்கப் ரக வாகனம் ஒன்று உட்பட கடலில் சுழியோட பயன்படுத்திய உபகரணங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றபட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கல்லடியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டு பிரஜைகள் 3 பேரை கடந்த வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து கடலில் மூழ்கடிக்கப்பட்ட யுத்த கப்பலின் பல இலட்சம் ரூபா பெறுமதி வாய்ந்த கப்பலின் எஞ்சின் பகுதியின் பாகங்கள் மற்றும் இதனை சுழியோடி மூலம் கழற்றுவதற்காக பயன்படுத்தப்பட்ட ஓட்சிசன் சிலின்டர்கள் நீச்சல் உடைகள் உட்பட பல உபகரணங்களை மீட்டுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்ட ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த தகப்பன் மற்றும் மகன், ஓஸ்ரிய நாட்டைச் சோர்ந்தவர் உட்பட மூவர் சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நீர் கொழும்பு பகுதில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து பிக்கப்ரக வாகனம் ஒன்றில் மட்டக்களப்பு கல்லடி பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கி இருந்த நிலையில் இந்த சட்டவிரோதமான செயற்பாட்டில் ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

இவர்கள் கடந்த 7 வருடங்களாக விடுமுறையில் இங்கு வந்து இந்த கப்பல் தொடர்பாக நீரில் மூழ்கி அவதானித்து வந்தாகவும் பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 3 வெளிநாட்டு பிரைஜைகள் நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: லியோன்

error: Content is protected !!