சிவனொளிபாதமலை வனபகுதியில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்கள் ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சிவனொளிபாதமலை வனபகுதியில் மேற்கொண்ட சுற்றிவலைப்பின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, சந்தேக நபர்களிடம் இருந்து 10கிலோ மரை இறைச்சியம், மரையின் தலை, கால்கள், தோல் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைதுசெய்யபட்ட ஜந்து சந்தேக நபர்களும் மஸ்கெலியாவை சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(நி)