திருக்கோவில் பிரதேசத்தில் 1643குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப்படிவம் விநியோகம்.

 

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சுமார் 1643 குடும்பங்களுக்கு சமூர்த்தி உரித்துப் படிவங்கள் அமைச்சர் கலாநிதி அனோமா கமகே அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று சனிக்கிழமை நண்பகல்(15) இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் அனோமா கமகே அவர்கள் கலந்து கொண்டு சமூர்த்தி உரிமைப்படிவங்களை வைபவ ரீதியாக வழங்கி வைத்திருந்தார்.

இந்நிகழ்வில் மேலும் அதிதிகளாக அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், திருக்கோவில் பிரதேசசபை தவிசாளர் இ.வி.கமலராஜன், உதவி பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், அமைச்சரின் மாவட்ட இணைப்பாளர் த.வினோகாந், உப தவிசாளர் எஸ்.விக்னேஸ்வரன், உறுப்பினர்களான பி.வீரா, கே.கமல், திருக்கோவில் பிரதேச செயலக கணக்காளர் வி.அரசரெத்தினம், சமூர்த்தி தலைமை முகாமையாளர் பி.பரமானந்தம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொது மக்கள் என பெருமெண்ணிக்கையானோர் கலந்து கொண்டு இருந்தனர்.

இங்கு அமைச்சர் அனோமா கமகே அவர்கள் உரையாற்றுகையில்,

அரசு இவ்வாறான மக்கள் நலன் திட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில் மக்கள் இதனை பெற்று இவற்றோடு நின்று விடாது தங்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் நாம் நாட்டில் வறுமையற்ற சமூகத்தினை கட்டியெழுப்ப முடியும் என தெரிவித்ததுடன்

திருக்கோவில் பிரதேசத்தில் விரையில் வறிய மக்களுக்கான வீடுகள் மற்றும் மலசலகூடங்களை கட்டுவதற்கான வேலைத் திட்டங்களை அமைச்சர் தயாகமகே அவர்களின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் அனோமா கமகே அவர்களிடம் மக்கள் பலர் தமக்கு முத்திரைகள் வழங்கப்படவில்லை என்று கவலை தெரிவித்திருந்த நிலையில் இவ்வாறு தவறவிடப்பட்டவர்கள் கவலையடைய தேவையில்லை மீண்டும் தகுதியானவிர்கள் இருக்குமானால் அவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்து சமூர்த்தி முத்திரைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என தனது உரையின் ஊடாக தெரிவித்து இருந்தார்.

 

 

 

 

 

Recommended For You

About the Author: Karthikesu

error: Content is protected !!