திருகோணமலையில் இருந்து கதிர்காமம் முருகன் ஆலயத்திற்கு பாதயாத்திரையாகச் செல்லும் இறுதி பாதயர்த்திரைக்குழுவினரும் அம்பாறை மாவட்டத்தை சென்றடைந்தனர்
வேல்சாமி துரைசாமி தலைமையிலான பாதயர்த்திரைக்குழுவினரே அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரசித்திபெற்ற பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த மாதம் 16 ஆம் திகதி வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் இருந்து 38 முருகபக்தர்களுடன் ஆரம்பித்த கதிர்காமத்திற்கான பாதயாத்திரைக் குழுவினர் 27 நாட்களின் பின்பு அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.
கதிர்காமம் ஆடிவேல் உற்சவம்; எதிர்வரும் ஜீலைமாதம் 03 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 17 ஆம் திகதி நரடபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவுபெறவுள்ளது. கதிர்காமத்திற்கு செல்லும் அம்பாறை குமண யால விலங்குகள் சரணலாய காட்டுப்பாதை எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்டவுள்ளது. தொடர்ந்து 13 தினங்கள் திறந்திருக்கும் காட்டுப்பாதையானது ஜீலை 09 ஆம் திகதி மாலை 3மணியுடன் மூடப்படவுள்ளது.
வடக்கு கிழக்கில் இருந்து கதிர்காமத்திற்கு பாதயாத்திரை மேற்;கொள்ளும் அனைத்து அடியார்களும் கிழக்கில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான உகந்தைமலை முருகன் ஆலயத்திற்குச் சென்று தங்கியிருந்து அங்கிருந்து காட்டுப்பாதையூடாக கதிர்காமம் நோக்கிப்பயணிக்கவுள்ளனர்.
இம்முறை காட்டுப்பாதையூடாக பயணிக்கும் பக்தர்களின் நலன்கருதி பாதுகாப்பு ஏற்பாடுகளும், காடுகளில் குடிநீர் வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கும் நடவடிக்கையில் படையினர் மற்றும் பிரதேச சபைகள் ஈடுபட்டுள்ளன.
வுழக்கத்தைவிட இம்முறை குறைந்தளவு பக்தர்களே பாதயாத்திரையில் ஈடுபடுவதாக பாதயர்த்திரைக்குழுவினர் தெரிவிக்கின்றனர். அம்பாறை பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திற்கு வருகைதந்த பாதயாத்திரைக்குழுவினர். துpரௌபதை அம்மன் ஆலய பிரதம பூசகர் சீவரெத்தினம் தலைமையில் நடைபெற்ற விசேட பூசை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.