அரச அலுவலர்கள் தேர்தலின்போது பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!!

ஜனாதிபதி தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களும், பக்கச்சார்பின்றி செயற்பட வேண்டும் என, தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில், ஆணைக்குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஏழாவது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், 16 ஆம் திகதி அதாவது நாளை நடைபெறும்.

ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணி குறித்த பொறுப்பானது, தேர்தலை நடத்துவதும் பக்கச்சார்பின்றி நிறைவேற்றுவதில் கௌரவமான வரலாற்றை கொண்ட அரசு ஊழியர்களிடம், தேர்தல் ஆணைக்குழுவினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இத் தேர்தலின் போது, தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றும் பொருட்டு, அரசாங்கத்தினால் நாட் சம்பளம் பெறும் ஊழியர்கள், தெரிவத்தாட்சி அலுவலர்கள் வரையான தேர்தல் கடமைகளில் ஈடுபடும் அரசாங்க ஊழியர் ஒவ்வொருவரும், தமது பொறுப்பு குறித்த சிறந்த புரிந்துணர்வுடனும், மிகச்சிறந்த கவனத்துடனும், ஆளொருவருக்கு விசேட கரிசனை காட்டாமலும் பக்கச்சார்பின்றியும் செயலாற்றுவார்கள் என்பது, தேர்தல் ஆணைக்குழுவின் எதிர்பார்ப்பாகும்.

தேர்தல் தினத்தன்று, தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பொறுப்பு குறித்து, வாக்காளர் ஒவ்வொருவரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

தேர்தலின் போது, தங்களுக்குரிய பொறுப்பு குறித்து கவனத்தில் எடுக்கும் போது, குறிப்பாக தேர்தல் நடைபெறும் காலத்தில், வாக்காளர்களுடனும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடனும் அவர்களின் அனுமதி பெற்ற முகவர்வகளுடனும், தாங்கள் நட்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் செயலாற்றும் போது, தகுந்த விதத்திலும் தயவன்புடனும் சகிப்புத் தன்மையுடனும், தயவு செய்து செயலாற்றுங்கள்.

இவ்வாறான ஒரு காலகட்டத்தில், வினைத்திறனுடன் சுறுசுறுப்பாகவும் பரஸ்பர தொடர்பொன்றை பேணிச்செல்வதற்கு தேவைப்படும் சமயோசிதம் இங்கிதம், தொழில்சார் விதிமுறை பயிற்சி கட்டுப்பாடு என்பன இன்றியமையாத பண்புகளாகும்.

எவருக்கும் அஞ்சாதீர்கள். தேர்தல் ஆணைக்குழுவுக்கும் நீதிமன்றத்திற்கும் மட்டுமே நீங்கள் பொறுப்பு கூற வேண்டும். எவருக்கும் விசேட கவனிப்பை காட்டாதீர்கள்.

உங்கள் செயற்பொறுப்பை நிறைவேற்றும் போது, மிகவும் பக்கச்சார்பற்ற முறையில் செயல்படுவது மிக முக்கியமான ஓர் அம்சமாகும். தேர்தல் ஒன்றின் போது ஒப்படைக்கப்பட்டுள்ள, குறித்துரைக்கப்பட்ட கடமையை சரிவர நிறைவேற்றுவதற்கு, அரச அலுவலர்கள் என்ற வகையில், இந் நாட்டின் வாக்காளர்களுக்கு கடப்பட்டுள்ளோம்.

ஆகையால், வாக்காளர்கள் எம்மிடம் இருந்து எதிர்பார்க்கும் செயற்பெறுப்பை, உயர்ந்த பட்சம் நிறைவேற்றுவோம்.

சுதந்திரமானதும் நீதியானதுமான ஒரு தேர்தலில், தமது மனசாட்சிக்கு அமைய வாக்களிப்பதற்கு வாய்ப்புள்ளது என்பது பொது மக்களுக்கு தெரியும்படியாக மட்டுமன்றி, அவர்கள் அதனை உணரும்படியாக இருப்பதற்கும் அது காரணமாக அமையும். என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!