அம்பாறையில், 503,790 பேர் வாக்களிக்க தகுதி!!

அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்காக 523 வாக்களிப்பு நிலையங்களில் 5 இலட்சத்து 3 ஆயிரத்து 790 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று, தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் இக்கருத்தை வெளியிட்டார்.

‘கல்முனை தேர்தல் தொகுதியில் 76 ஆயிரத்து 283 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 89 ஆயிரத்து 57 பேரும், பொத்துவில், தேர்தல் தொகுதியில் ஒரு இட்சத்து 43 ஆயிரத்து 229 பேரும், அம்பாறை தேர்தல் தொகுதியில் ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 385 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளுக்காக மாவட்டத்தில் 6 ஆயிரத்து 470 அரச உத்தியோகத்தர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் வாக்குகள் எண்ணும் நிலையங்கள் 53 இம்மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சுதந்திரமானதாகவும் நடுநிலையாகவும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான சகல நடவடிக்கையும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், சில இடங்களில் வாகன போக்குவரத்துக்களையும் இலவசமாக முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்திற்கான வாக்குப் பெட்டிகள் அனைத்தும், அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப வளாகத்தில் இருந்து, இன்று காலை பொலிஸ் பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன’. என குறிப்பிட்டுள்ளார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!