யாழில் இராணுவம் பாடசாலை மாணவர்களுக்கு உதவி!

மிகவும் கஸ்ரப்பிரதேசமான, யாழ்ப்பாணம் துன்னாலை தெற்கு பகுதியில், வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு, இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

துன்னாலை தெற்கு தமிழ்க் கலவன் பாடசாலை மாணவர்கள் 96 பேருக்கு, இராணுவத்தினரால் இந்த பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பாடசாலை அதிபர் திருநாவுக்கரசு அரவிந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி, பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இதன் போது, பாடசாலை மாணவர்களுக்கான உபரகரணங்களை வழங்கி வைத்ததார்.
நிகழ்வில், 55 படைப்பிரிவின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் புளத்கம, வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் வை.இரவீந்திரன், கரவெட்டி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் யூ.சிவகாமி மற்றும் பெற்றோர்கள், பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

இங்கு உரையாற்றிய யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி.

யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவம் மாணவர்களின் கற்றல் செயற்பாட்;டிற்காக பல்வேறு வகையில் உதவிகளை வழங்கி வருகின்றது.
குறிப்பாக வடக்கு பிரதேசத்தில் இராணுவத்தினரால் துவிச்சக்கரவண்டிகள், கற்றல் உபரகரணங்கள், புலமைப்பரிசில் என்பன வழங்கி வைக்கப்பட்டு வரப்படுகிறன.

பாடசாலை செல்லும் மாணவர்களுக்கு வறுமை என்பது ஒரு புறம் இருக்க அவர்களின் கல்வி வறுமையினால் பாதிக்க கூடாது என்பதறாக இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டு வரப்படுகிறது. தொடர்ந்தும் உதவிகளை வழங்க இராணுவம் எப்பொழுதும் தயாராவே உள்ளது என தெரிவித்தார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!