அரசியல் தலைமைகள் மக்களுக்காக செயற்பட வேண்டும் : டிலான்

அரசியல் தலைமைகளில் இருப்பவர்கள், போட்டிகளை விடுத்து, மக்களுக்காக செயற்பட வேண்டும் என, பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

இன்று, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்து பௌத்த கலாசார பேரவையின் மூலமாக, இந்து முஸ்லிம் சமுகத்திற்கும் நல்ல ஒரு தோற்றத்தை உருவாக்கிக் கொடுக்க முடியும்.

சிலவேளைகளில் எங்களுடைய அப்பாவி முஸ்லிம் மக்களுக்கும், இப்படியான சிங்களம் கற்கும் வாய்ப்பு கிடைக்குமாக இருந்தால், எங்களுடைய சமுகத்திலே, நல்லிணக்கமும் ஒற்றுமையும் ஏற்படும் என்பதே எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது.

ஆனால், தேவையில்லாத சில முஸ்லிம் தலைவர்கள் அதற்கு இடம்கொடுக்காமல், அப்பாவி முஸ்லிம் மக்களை அடக்கி வைத்திருக்கிறார்கள்.

எது எப்படியாக இருப்பினும், அரசியல் தலைமைகளில் இருப்பவர்கள், இப்படியான போட்டிகளை விடுத்து, எமது இளைஞர் யுவதிகளுக்கு இப்படியான ஒரு சந்தர்ப்பத்தை அமைத்துக் கொடுத்தால், எங்களுடைய நாட்டில் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

சிலவேளைகளில், பாராளுமன்றத்தில் தமிழர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றது.
இருந்த போதிலும் இங்கு வருகை தந்திருக்கும் பௌத்த மத குரு அவர்களே, வடக்கையும் மேல் மாகாணத்தையும் பொறுத்த வரைக்கும், எங்களுடைய கிராமத்திலே இருக்கின்ற அப்பாவி மக்களுக்கும், இப்படியான செயற்பாட்டை நீங்கள் முன்னெடுத்து செல்வீர்கள் ஆனால், அவர்களுக்கு இடையிலும் நாங்கள் ஒரு ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள முடியும்.
என குறிப்பிட்டுள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!