தமிழ் மக்களுக்கு சம உரிமை வேண்டும் – கனகராஜ்!!

கடந்த நான்கரை வருடங்களாக சண்டையிட்ட அரசாங்கம், மக்களை நேசிக்கவில்லை எனவும், மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவில்லை எனவும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று, நுவரெலியா நோர்வூட் ரொக்வூட் தோட்ட பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

நல்லாட்சி என சொல்லப்படும் ஜக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தில் நான்ங்கரை வருட காலமாக தமக்குள் சண்டைபிடித்து கொண்டார்களே தவிர, மக்களை அவர்கள் நேசிக்கவில்லையெனவும் மக்களுக்கான எந்த ஒரு அபிவிருத்தியும் இடம் பெறவில்லை.

நான்கரை வருட காலபகுதியில் மக்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகள் அனைத்தும் தவடுபொடியாகி இருக்கிறது, தொழிலாளர்கள் வாழமுடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுடுள்ளனர்.

படித்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு இல்லை அபிவிருத்திக்கென ஒதுக்கபட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தபடவில்லை இறுதிகட்டத்தில் வீதிகள் புனரமைப்பு செய்யபடுகிறது அது தேர்தலுக்கான அபிவிருத்தியாக இருக்கும்.

நாட்டில் ஒரு ஆட்சியை ஏற்படுத்துகின்ற போது அந்த ஆட்சியின் ஊடாக மக்களுக்கு சேவையினை மேற்கொள்ள வேண்டும், இந்த நான்கரை வருடத்தில் தோட்ட தொழிலாளர்கள் என்ன நன்மைகளை அனுபவித்துள்ளார்கள்.

கண் முன்பாக தோட்டங்கள் காடாக்கபட்டுள்ளது சிறுத்தை மற்றும் அட்டை குளவிகள் என்பன அதிகரித்து தொழிலாளர்களை தாக்குவதையே நாம் பார்த்து இருக்கின்றோம்.

தேயிலை கொழுந்து வளர்சி விழ்ச்சியடைந்துள்ளது. தேயிலை மலைகளுக்கு பசளைகள் இடுவதில்லை இது போன்ற பிரச்சினைகள் இருப்பதால் எங்கள் தொழிலாளர்களுக்கு தொழிசெய்ய முடியவில்லை. தேயிலை கொழுந்து வளர்ச்சி கானப்பட்டால் மாத்திரமை தொழிலாளி ஒருவர் ஒரு நாளைக்கு 16கிலோ தேயிலை கொழுந்து பறிக்கமுடியும். இந்த அரசாங்கம் திட்டமிட்டு தோட்டங்களை முடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய அரசாங்கத்தில் உள்ளவர்கள் இரண்டு பிரச்சினைகளை மாத்திரம் கூறிவருகிறார்கள் ஒன்று வீட்டு பிரச்சினை மற்றயது சம்பள பிரச்சினை, கமிஷன் என்ற முறையில் பத்து இலட்ச்சம் ருபாய் வீடமைப்பு திட்டத்தை ஏழு இலட்ச்சம் ருபாய்க்கு கொண்டுவந்துள்ளனர் இது அவர்களுடைய சாதனை.
இந்த நாட்டில் சிங்கள மக்களுக்கு 20பேர்ச் கானி வழங்கபடுமானால் தமிழ் மக்களுக்கும் 20பேர்ச்கானி வழங்கபட வேண்டும் இது போன்ற சரியான திட்டங்களை வைத்து இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆதரவு வழங்கிவருகிறது. என தெரிவித்தார். (சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!