மாடி வீடா? சொந்த காணியா? – திகாம்பரம்!!

மலையக மக்களுக்கான தன வீட்டுத்திட்டம் உட்பட பல்வேறு அபிவிருத்திப் பணிகளை தொடர வேண்டுமாயின், மக்கள் சந்தித்து வாக்களிக்க வேண்டும் என, மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.


இன்று, நுவரெலியா ஹட்டன் சாமிமலை ஸ்டொக்கம் தோட்டத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்.

நாட்டில் இன்று ஜனநாயகம் கானப்படுகின்றமையால் மக்கள் யாரை வேண்டுமானாலும் கேள்வி கேட்கலாம், எனவே இது தான் ஜனநாயகம். அன்று ரனசிங்க பிரேமேதாச பிரஜாஉரிமை பெற்று கொடுத்ததன் காரனமாகத்தான் மக்கள் எனக்குவாக்களித்து பாராளுமன்றம் அனுப்பினார்கள்.

சஜித்பிரேமேதாச ;வெற்றிபெற்றால் மாத்திரமே தனிவீட்டு திட்டத்தை நாம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும்; இல்லாவிட்டால் மாற்று கட்சியினர் தேர்தல் விஞ்ஞாபாணத்தில் குறிப்பிட்டுள்ளனர் மாடி வீடுதான் அமைக்க முடியுமென ஆகையால் கோட்டாபாய ராஜபக்ஸ வெற்றி பெற்றால் இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கபடுகின்ற இந்திய வீடமைப்பு திட்டம் முன்னெடுக்கபட முடியாத ஒரு சூழ்நிலை கானப்படும்.

இந்த நாட்டில் நிம்மதியான முறையில் மக்கள் வாழவேண்டும் என்றால் கட்டாயம் சஜித்பிரேமேதாசவிற்கு எதிர்வரும் 16ம் திகதி வாக்களிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.(சி)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!