ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரு தாய் பிள்ளை -மகிந்த .

 

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து போட்டியிட்டு 71 வீத வாக்கினைப் பெற்று கோத்தாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என எதிர்கட்சி தலைவர் ஷ தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கேகாலை மாவட்டத்தில் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அத்தோடு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா நாளாந்த சம்பளத்தையும் மேலதிக தீபாவளி முற்பணத்தை பெற்றுக் கொடுக்க முடியாத அரசாங்கம்1500ரூபா நாளாந்த சம்பத்தைப் பெற்றுக் கொடுப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றுவதாக அவர் குறிப்பிட்டார்

சுதந்திர கட்சியும் பொதுஜன பெரமுனவும் ஒரே கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இவ்விரு கட்சிகளும் ஒரு தாய் மக்களாகும். கடந்த ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்க்கட்சி பலத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எம்மிடம் வழங்கினார் என தெரிவித்தார்.

இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடும் இந்த தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார் என அவர் தெரிவித்தார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!