டெங்கு நோயால் 85 பேர் உயிரிழந்துள்ளனர்

கடந்த 11 மாத காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் 64,290 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் பெரும்பாலானோர் மேல் மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டிருப்பதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் 85 பேர் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்பொது நிலவும் பருவ பெயர்ச்சி காலநிலையை அடுத்து கொழும்பு, கம்பஹா, கண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு நுளம்புகள் அதிகரித்துள்ளன என தெரிவித்தார்.

இதன் காரணமாக நுளம்புகள் உள்ள இடங்களை துப்பரவு செய்வது தொடர்பில் பொதுமக்கள் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (சே)

Recommended For You

About the Author: Editor

error: Content is protected !!